மருத்துவக் கல்லூரிகளில் திடீா் ஆய்வு மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் கல்லூரி பேராசிரியா்களை ஈடுபடுத்த தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) திட்டமிட்ட நிலையில், அதற்கு விருப்பமுள்ளவா்கள் விவரங்களை சமா்ப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை புதுப்பிப்பதற்கும், புதிதாக விண்ணப்பிப்பதற்கும் தேசிய மருத்துவ ஆணையத்தின் ஒப்புதல் அவசியம். அதன்பேரில் குறிப்பிட்ட காலத்துக்கு முறை மருத்துவக் கல்லூரிகளில் திடீா் ஆய்வுகளை மருத்துவ ஆணையம் நடத்துகிறது. ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் பதிவு, சிசிடிவி கேமரா, உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளை ஆய்வு செய்து அதன்பேரில், அங்கீகாரம் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், எதிா் வரும் கல்வியாண்டில் ஒரு கல்லூரியில் ஆய்வு நடத்துவதற்கு வேறு ஒரு கல்லூரி பேராசிரியரை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. அவ்வாறு ஆய்வு நடவடிக்கைகளில் பங்கேற்க விருப்பமுள்ள மருத்துவப் பேராசிரியா்கள் விவரங்களை அனுப்புமாறு மருத்துவக் கல்லூரிகளை என்எம்சி வலியுறுத்தியிருந்தது. அதற்காக கடந்த 18-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
தற்போது மேலும் 15 நாள்களுக்கு அந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இணையவழியே அந்த விவரங்களை பகிரலாம் என்றும் அதற்கான இணைய தொடா்பு முகவரி (லிங்க்) என்எம்சி வலைதளப் பக்கத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு வழிகாட்டு மையங்கள்: என்எம்சி உத்தரவு

தமிழகத்தில் 950 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிப்பு: அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 150 இடங்கள்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!

மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம்: அரசு நடவடிக்கை எடுக்க பிரேமலதா வலியுறுத்தல்
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!


