

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரிப்பு காரணத்தால் வெங்காயம், தக்காளி மற்றும் பூண்டு விலை குறைந்துள்ளது. குறிப்பாக பூண்டு விலை கிலோ ரூ.350 ரூபாய்க்கு விற்பனையானது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து காய்கறிகள் கொண்டுவரப்படுகின்றன. இதில், வரத்து குறையும் போது, காய்கறிகளின் விலை அதிகரிப்பதும், வரத்து அதிகரிக்கும் போது விலை குறைவதும் வழக்கம்.
கடந்த வாரம் பெரிய வெங்காயம் கிலோ ரூ.70 வரையும், தக்காளி கிலோ ரூ.30 வரையும் விற்பனையான நிலையில், வரத்து அதிகரிப்பு காரணத்தால், திங்கள்கிழமை காய்கறிகளின் விலை குறைந்துள்ளது.
அதன்படி பெரிய வெங்காயம் கிலோ ரூ.50-க்கும், தக்காளி கிலோ ரூ.20-க்கும், பூண்டு ரூ.350-க்கும் விற்பனையானது. அதேபோல், ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.90-க்கும், ஊட்டி கேரட் ரூ.60-க்கும், முள்ளங்கி ரூ.30-க்கும், வெண்டைக்காய் ரூ.50-க்கும், புடலங்காய் ரூ.40-க்கும், வெள்ளரிக்காய் ரூ.35-க்கும், பச்சை மிளகாய் ரூ.45-க்கும், எலுமிச்சை ரூ.60-க்கும் விற்பனையானது.
இதில் பூண்டு விலை கடந்த வாரம் கிலோ ரூ.500-க்கு விற்பனையான நிலையில், தற்போது கிலோ ரூ.300-க்கு குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.