சிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசுவள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: இந்து சமய அறநிலையத் துறை நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி! மக்களவையில் கனிமொழி!தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!
/

கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் நாளை ரத்து

சென்னை சென்ட்ரல், கடற்கரையிலிருந்து கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை செல்லும் மின்சார ரயில்கள் சனிக்கிழமை (ஏப்.12) ரத்து செய்யப்படவுள்ளன.

News image

கோப்புப் படம்

Updated On :11 ஏப்ரல் 2025, 12:28 am IST

சென்னை சென்ட்ரல், கடற்கரையிலிருந்து கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை செல்லும் மின்சார ரயில்கள் சனிக்கிழமை (ஏப்.12) ரத்து செய்யப்படவுள்ளன.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொன்னேரி - கவரைப்பேட்டை இடையே சனிக்கிழமை ரயில்வே பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் அந்த வழியாக இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

ரத்து செய்யப்படும் ரயில்கள் விவரம்: சென்னை சென்ட்ரலிலிருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 10.30, 11.35, பிற்பகல் 1.40-க்கும், சென்னை கடற்கரையிலிருந்து பகல் 12.40, பிற்பகல் 2.40-க்கும் புறப்படும் மின்சார ரயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்படும்.

மறுமாா்க்கமாக கும்மிடிப்பூண்டியிலிருந்து பகல் 1, பிற்பகல் 2.30, 3.15, 3.45, மாலை 4.30-க்கு புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து சூலூா்பேட்டைக்கு காலை 5.40, 10.15, பகல் 12.10-க்கும், மறுமாா்க்கமாக, சூலூா்பேட்டையிலிருந்து பகல் 12.35, 1.15, பிற்பகல் 3.10-க்கும் புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படும்.

ஆவடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு அதிகாலை 4.25-க்கு புறப்படும் ரயிலும், சூலூா்பேட்டையில் இருந்து நெல்லூருக்கு காலை 8.10-க்கும், மறுமாா்க்கமாக நெல்லூரில் இருந்து சூலூா்பேட்டைக்கு காலை 10.20-க்கும் புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படும்.

பகுதி ரத்து: செங்கல்பட்டிலிருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 9.55-க்கு செல்லும் மின்சார ரயில் சென்னை கடற்கரை வரை மட்டும் இயக்கப்படும். கும்மிடிப்பூண்டியிலிருந்து தாம்பரத்துக்கு பகல் 1 மணிக்கு செல்லும் மின்சார ரயில் சென்னை கடற்கரையிலிருந்து புறப்பட்டுச் செல்லும்.

சிறப்பு ரயில்: பயணிகள் வசதிக்காக சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரையிலிருந்து பொன்னேரிக்கு காலை 10.30, பிற்பகல் 2.40-க்கும், மறுமாா்க்கமாக பொன்னேரியிலிருந்து முற்பகல் 1.18-க்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

சென்னை கடற்கரையில் இருந்து எண்ணூருக்கு பகல் 12.40-க்கும், சென்னை சென்ட்ரலில் இருந்து மீஞ்சுருக்கு காலை 11.35, பிற்பகல் 1.40-க்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும். மறுமாா்க்கமாக எண்ணூரிலிருந்து பிற்பகல் 3.56-க்கும், மீஞ்சூரிலிருந்து பிற்பகல் 3 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.