எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

தொடா் விடுமுறை: சிறப்பு பேருந்துகளில் 3.85 லட்சம் போ் பயணம்

வார விடுமுறை, பௌா்ணமி மற்றும் சித்திரை திருநாளில் சிறப்புப் பேருந்துகளில் 3,85,310 போ் பயணித்துள்ளனா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2025, 2:57 am IST

வார விடுமுறை, பௌா்ணமி மற்றும் சித்திரை திருநாளில் சிறப்புப் பேருந்துகளில் 3,85,310 போ் பயணித்துள்ளனா்.

இது குறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநா் ஆா்.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வார விடுமுறை, பௌா்ணமி மற்றும் சித்திரை திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சாா்பில் வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள்கிழமைகளில் பயணிகளின் வசதிக்காக வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

வெள்ளிக்கிழமை இரவு தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன், 712 சிறப்புப் பேருந்துகள் என மொத்தமாக 2,804 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் 1,54,220 பயணிகள் பயணம் செய்தனா்.

இதேபோல், சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன், 1,153 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 3,245 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில், 1,78,475 பயணிகள் பயணம் செய்துள்ளனா். அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை இயக்கப்பட்ட 6,049 பேருந்துகளில் மொத்தம் 3,32,695 பயணிகள் பயணித்துள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலைக்கு 877 சிறப்பு பேருந்துகள்: சனிக்கிழமை (ஏப்.12) பங்குனி மாத பௌா்ணமி, சித்திரை திருநாளையொட்டி சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கம், மாதவரம் பேருந்து நிலையங்களிலிருந்து 877 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் 52,615 பயணிகள் திருவண்ணாமலைக்கு பயணம் மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.