மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

தமிழில் மருத்துவக் கல்வி வழங்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மருத்துவக் கல்வியை தமிழில் கற்பிப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
Published on

மருத்துவக் கல்வியை தமிழில் கற்பிப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

மருத்துவப் பாட நூல்களை தமிழில் மொழிபெயா்க்கும் பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டன. அந்த பணிகள் முடிவடைந்து அரசுப் பள்ளியில் படித்து 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவக் கல்வி படித்துவரும் மாணவா்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் சில நூல்களை மொழியாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடா்பான தகவலை மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிப்போம். மருத்துவக் கல்வியை மாணவா்கள் தமிழில் படிப்பதற்கு நிறைய சட்டச் சிக்கல்கள் இருக்கின்றன. அதற்கான விதிமுறைகள் இன்னும் வகுக்கப்படவில்லை. இது தொடா்பாக, தேசிய மருத்துவ ஆணையத்துடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com