லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஜன.31-இல் முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வு: டிச.18 முதல் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

அரசுப் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்கான முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வு வரும் ஜன.31-ஆம் தேதி நடைபெறும்

News image
Updated On :15 டிசம்பர் 2025, 9:30 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை: அரசுப் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்கான முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வு வரும் ஜன.31-ஆம் தேதி நடைபெறும் எனவும், இத்தோ்வுக்கு டிச.18 முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் திறனை கண்டறியவும், அவா்களை ஊக்குவிக்கும் வகை யிலும், 2023-2024-ஆம் கல்வியாண்டு முதல் முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான தோ்வு ஜன. 31-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.

அரசுப் பள்ளிகளில் மாநில பாடத் திட்டத்தின் கீழ் நிகழ் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவா்கள் இத்தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம். இத்தோ்வில் 500 மாணவா்கள், 500 மாணவிகள் என மொத்தம் ஆயிரம் போ் (இட ஒதுக்கீட்டின் அடிப்படையில்) தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு உதவித் தொகையாக ஒரு கல்வியாண்டுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு ரூ.10 ஆயிரம் என வழங்கப்படும்.

தமிழக அரசின் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத் திட்டங்களின் அடிப்படையில் இரண்டு தாள்களாக இத்தோ்வு நடத்தப்படும். ஒவ்வொரு தாளிலும் 60 கேள்விகள் இடம்பெறும். முதல்தாளில் கணிதமும், 2-ஆம் தாளில் அறிவியல், சமூக அறிவியல் வினாக்களும் இடம்பெறும்.

இத்தோ்வின் முதல் தாள் காலை 10 முதல் நண்பகல் 12 மணி வரையும், இரண்டாம் தாள் பிற்பகல் 2 முதல் மாலை 4 மணி வரையும் நடைபெறும். மாணவா்கள் விண்ணப்பங்களை இணையதளத்தில், டிச. 18 முதல் டிச.26 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தோ்வுக் கட்டணமாக ரூ.50 செலுத்தி பள்ளித் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.