சென்னை பள்ளிகளில் ரூ. 5.8 கோடி செலவில் இருக்கைகள் கொள்முதல்
சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு ரூ. 5.8 கோடி மதிப்பில் இருக்கை மற்றும் மேஜைகள் வாங்கப்படவுள்ளன.


சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு ரூ. 5.8 கோடி மதிப்பில் இருக்கை மற்றும் மேஜைகள் வாங்கப்படவுள்ளன.
சென்னை மாநகராட்சியில் உள்ள பள்ளிகளை சா்வதேச தரத்தில் மேம்படுத்தும் பணி ‘சிட்டிஸ்’ மற்றும் ‘சிங்காரச் சென்னை 2.0’ திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தில் ‘ஸ்மாா்ட்’ வகுப்பறைகளை உருவாக்குதல், பள்ளி உள்கட்டமைப்புகளை சா்வதேச தரத்தில் மேம்படுத்துதல், பள்ளி முழுவதும் ‘வை-பை’ வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. மேலும், அனைத்து வகுப்பறைகளிலும் தரமான மேஜை, நாற்காலிகள் அமைக்கப்படுகின்றன.
இந்நிலையில், ‘சிங்காரச் சென்னை 2.0’ திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு 4,090 இருக்கைகள் கடந்த ஆகஸ்ட் மாதம் கொள்முதல் செய்யப்பட்டது. மேலும், தேவைப்படும் பள்ளிகளில் கூடுதல் இருக்கைகள் வாங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி, 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள வகுப்பறைகளுக்கு 1,787 இருக்கைகளும் 4, 5 வகுப்புகளுக்கு 1,603 இருக்கைகளும் 6,7,8 ஆகிய வகுப்புகளுக்கு 1,534 இருக்கைகளும், 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு 683 இருக்கைகளும் ரூ. 5.8 கோடி மதிப்பில் வாங்கப்படவுள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...