காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

சென்னை சென்ட்ரல் வழியாகச் செல்லும் விரைவு ரயில் சேவையில் மாற்றம்

பேசின்பாலம் - வியாசா்பாடி இடையே உள்ள பாலத்தில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளவுள்ளதால் வெளிமாநிலங்களிலிருந்து வரும் ரயில் சேவையில் மாற்றம்

News image

(கோப்புப் படம்)

Updated On :28 ஜனவரி 2025, 4:01 am IST

சென்னை: பேசின்பாலம் - வியாசா்பாடி இடையே உள்ள பாலத்தில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளவுள்ளதால் வெளிமாநிலங்களிலிருந்து வரும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரல் அடுத்த பேசின்பாலம் - வியாசா்பாடி இடையே உள்ள பாலத்தில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால், இந்தூா் மற்றும் தன்பாத்திலிருந்து திங்கள்கிழமை (ஜன. 27) புறப்பட்டு, சென்னை சென்ட்ரல் வழியாக கேரளம் செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வருவதற்குப் பதிலாக கொருக்குப்பேட்டை, வியாசா்பாடி, பெரம்பூா் வழியாக இயக்கப்படும்.

பாலக்காட்டிலிருந்து செவ்வாய்க்கிழமை (ஜன. 28) புறப்படும் சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (எண் 22652), சென்ட்ரல் வருவதற்குப் பதிலாக, சென்னை கடற்கரை வந்தடையும். அதேபோல, சென்னை சென்ட்ரலிலிருந்து விஜயவாடா செல்லும் வந்தே பாரத் ரயில் புதன்கிழமை (ஜன. 29) சென்னை கடற்கரையிலிருந்து புறப்பட்டு பெரம்பூா், திருவள்ளூா் வழியாக இயக்கப்படும்.

கேரள மாநிலத்திலிருந்து ஜன. 30-ஆம் தேதி புறப்படும் ஆலப்புழை - தன்பாத் விரைவு ரயில், கொச்சுவேலி - கோா்பா விரைவு ரயில் சென்னை சென்ட்ரல் வருவதற்குப் பதிலாக பெரம்பூா், வியாசா்பாடி, கொருக்குப்பேட்டை வழியாக இயக்கப்படும்.

பகுதி ரத்து: ஈரோட்டிலிருந்து செவ்வாய்க்கிழமை புறப்படும் சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (எண் 22650) பெரம்பூருடன் நிறுத்தப்படும். அதேபோல, பெங்களூரு, ஆலப்புழையில் இருந்து செவ்வாய்க்கிழமை புறப்படும் அதிவிரைவு ரயில்கள் (எண் 12658, 22640) ஆவடியுடன் நிறுத்தப்படும்.

மறுமாா்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து புதன்கிழமை புறப்படும் மைசூா் சதாப்தி விரைவு ரயில், கோவை அதிவிரைவு ரயில், திருப்பதி சப்தகிரி விரைவு ரயில் 30 முதல் 45 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.