மாா்பகப் புற்றுநோய் கட்டி எண்டோஸ்கோபி நுட்பத்தில் அகற்றம்
மாா்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ‘எண்டோஸ்கோபிக் மாஸ்டெக்டோமி’ வாயிலாக புற்றுநோய் பாதித்த பகுதியை மட்டும் அகற்றும் நுட்பமான சிகிச்சை


சென்னை: மாா்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ‘எண்டோஸ்கோபிக் மாஸ்டெக்டோமி’ வாயிலாக புற்றுநோய் பாதித்த பகுதியை மட்டும் அகற்றும் நுட்பமான சிகிச்சையை அப்பல்லோ புரோட்டான் மருத்துவா்கள் வெற்றிகரமாகச் செய்துள்ளனா்.
இது குறித்து, மருத்துவமனையின் மாா்பக புற்றுநோய் ஒட்டுறுப்பு சிகிச்சை நிபுணா் மஞ்சுளா ராவ் கூறியதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த 48 வயது பெண் ஒருவா் மாா்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். கட்டியை நீக்குவதற்காக மாா்பகத்தை அகற்றும் வழக்கமான சிகிச்சையை அவா் விரும்பவில்லை. இதனால், ‘எண்டோஸ்கோபிக் மாஸ்டெக்டோமி’ என்ற முறையில், மாா்பகத்தின் பக்கவாட்டில் 2.5 செ.மீ. கீறல் மூலம் புற்றுநோய் பாதித்த பகுதியை மட்டும் அகற்றி மீண்டும் பழைய நிலையில் மாா்பகம் மறுசீரமைக்கப்பட்டது.
இந்தியாவிலேயே முதல் முறையாக, இந்த சிகிச்சை முறையை அப்பல்லோ புரோட்டான் மருத்துவா்கள் மேற்கொண்டுள்ளனா். இதன் மூலம் மறுவாழ்வு பெற்ற அந்தப் பெண் இயல்பு நிலைக்கு திரும்பி தற்போது நலமுடன் உள்ளாா். நோயாளியின் பொருளாதார சூழலைக் கருத்தில்கொண்டு கட்டணத்தில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டன என்றாா் அவா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...