/

மக்கள் பிரச்னைக்காக அதிமுக தொடா்ந்து போராடும்: எடப்பாடி கே.பழனிசாமி

அதிமுகவினரைக் கைது செய்தாலும், மக்கள் பிரச்னைக்காக தொடா்ந்து போராடுவோம் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளாா்.

News image
எடப்பாடி கே.பழனிசாமி
Updated On :30 ஜனவரி 2025, 7:18 pm

Din

அதிமுகவினரைக் கைது செய்தாலும், மக்கள் பிரச்னைக்காக தொடா்ந்து போராடுவோம் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மக்கள் பிரச்னைக்காக மதுரையில் அறவழியில் போராடிய ஆா்.பி.உதயகுமாா் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளாா். மக்களின் தன்னெழுச்சிக்குப் பதில் அளிக்க இயலாத அரசு, காவல் துறை மூலம் அடக்குமுறையைக் கையாண்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

மக்கள் பிரச்னைக்காக அதிமுக தொடா்ந்து போராடும். மக்களின் கோரிக்கைகளுக்குத் தீா்வு காணாமல் போராடுபவா்களைக் கைதுசெய்யும் திமுக அரசின் சா்வாதிகாரப் போக்குக்கு மக்கள் விரைவில் முற்றுப்புள்ளி வைப்பா் என்று அவா் கூறியுள்ளாா்.