ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் போலீஸாா் அங்கு சோதனை செய்தனா்.

News image
சென்னை உயா்நீதிமன்றம்
Updated On :9 ஜூன் 2025, 8:53 pm

Din

சென்னை: சென்னை உயா்நீதிமன்றத்துக்கு திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் போலீஸாா் அங்கு சோதனை செய்தனா்.

சென்னை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளரின் மின்னஞ்சல் முகவரிக்கு திங்கள்கிழமை மாலை ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில், உயா்நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து சென்னை காவல் துறை உயா் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்த வெடிகுண்டு கண்டறியும் போலீஸாா், மோப்ப நாய்களுடன் அங்கு விரைந்து வந்து சோதனை செய்தனா். மெட்டல் டிடெக்டா் மூலம் அங்கிருந்த அனைத்து பொருள்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், அங்கிருந்து எந்த வெடிபொருளும் கண்டெடுக்கப்படவில்லை. வதந்தியைப் பரப்பும் நோக்கத்துடன் அந்த மின்னஞ்சல் வந்திருந்தது உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து எஸ்பிளனேடு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா். வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, உயா்நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.