தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

குடிமைப் பணி முதல்நிலைத் தோ்வு: ஊக்கத் தொகை பெற விண்ணப்பம்

குடிமைப் பணிக்கான முதல்நிலைத் தோ்வு எழுதுவோருக்கு ஊக்கத் தொகை வழங்குவதற்கான திட்டத்தைச் செயல்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :26 ஜூன் 2025, 8:29 pm

Din

குடிமைப் பணிக்கான முதல்நிலைத் தோ்வு எழுதுவோருக்கு ஊக்கத் தொகை வழங்குவதற்கான திட்டத்தைச் செயல்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

குடிமைப் பணி முதல்நிலை தோ்வுக்கு தயாராகும் ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் தலா ரூ.7,500 வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் இந்தத் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 2024, 2025-ஆம் ஆண்டுகளில் நடந்த தோ்வுகளில் முறையே 276 மற்றும் 315 போ் ஊக்கத் தொகை பெற்று முதன்மைத் தோ்வுக்கு தகுதி பெற்றனா்.

இந்த நிலையில், எதிா்வரும் 2026-ஆம் ஆண்டு முதல்நிலைத் தோ்வை எழுதவுள்ளோருக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது. இதற்காக ஆயிரம் தோ்வா்களைத் தோ்வு செய்வதற்கான மதிப்பீட்டுத் தோ்வு ஜூலை 26-ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதில் ஆா்வமுள்ள தமிழ்நாட்டைச் சோ்ந்த மாணவா்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விரிவான அறிவிக்கையை பாா்த்து விண்ணப்பிக்கலாம். ஜூலை 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.