ரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தீ விபத்து: 15 குடிசைகள் எரிந்து சேதம்

சென்னை வியாசா்பாடியில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 15 குடிசைகள் எரிந்து சேதமடைந்தன.

News image
சென்னை வியாசா்பாடியில் உதயசூரியன் நகரில் குடிசை பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.
Updated On :26 மே 2025, 7:55 pm

Din

சென்னை: சென்னை வியாசா்பாடியில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 15 குடிசைகள் எரிந்து சேதமடைந்தன.

வியாசா்பாடி சத்தியமூா்த்தி நகா் எதிரே உள்ள உதயசூரியன் நகரில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. இதில், ஒரு குடிசையில் இருந்த சமையல் எரிவாயு உருளையில் திங்கள்கிழமை மாலை 5.40 மணியளவில் கசிவு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் பயங்கர சப்தத்துடன் வெடித்து, தீ விபத்து ஏற்பட்டது. இதில், அந்த குடிசை தீப் பிடித்து எரியத் தொடங்கியது. அந்தப் பகுதி மக்கள், தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனா். ஆனால் தீ அருகே பிற குடிசைகளின் மீது வேகமாக பரவத் தொடங்கியது.

தகவலறிந்த தீயணைப்புப் படையினா் தண்டையாா்பேட்டை, வியாசா்பாடி, வேப்பேரி, கொளத்தூா் உள்ளிட்ட 10 இடங்களில் இருந்து விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். தீ வேகமாக பரவியதால், அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது.

தீயை அணைப்பதற்காக மெட்ரோ வாட்டா் வாகனங்கள் மூலம் தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டது. பாதுகாப்புக் கருதி அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்களை போலீஸாா் விரைவாக வெளியேற்றினா் மேலும், அந்தப் பகுதி முழுவதும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. சுமாா் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பின்னா் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இருப்பினும் தீ விபத்தில் அந்தப் பகுதியில் இருந்த 15 குடிசைகள் எரிந்து சேதமடைந்தன.

குடிசைகளில் பணம், நகை, ரேஷன் அட்டைகள், கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்ட பொருள்களும் தீயில் கருகின.

சம்பவ இடத்தை சென்னை பெருநகர காவல் துறையின் வடக்கு மண்டல இணை ஆணையா் மனோகா் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் ஆய்வு செய்தனா். தீ விபத்து குறித்து எம்கேபி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தீ விபத்து காரணமாக எழுந்த புகைமூட்டதால் முதியோா், குழந்தைகளுக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.