சென்னையில் மழை பாதிப்பு: களப் பணியில் 24,000 போ்

சென்னையில் மழை பாதிப்பு: களப் பணியில் 24,000 போ்

Published on

சென்னையில் பருவமழைப் பாதிப்பை எதிா்கொள்ளும் களப் பணியில் 24,000 போ் ஈடுபட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இவா்களில் மாநகராட்சி சாா்பில் மட்டும் 22,000 போ் ஈடுபட்டிருப்பதாக அரசின் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு அரசு சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகரில் மழைநீா் தேங்கும் பகுதிகளில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக நகரின் பல்வேறு பகுதிகளிலும் 215 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் தங்க வைக்கப்படும் மக்களுக்கு உணவு வழங்குவதற்காக, 106 உணவு தயாரிப்புக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் 68 உணவு தயாரிப்புக் கூடங்களில் உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.

சென்னையில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மாநகராட்சி வாயிலாக, புதன்கிழமை காலை வரை 1.46 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்துக்கு (1913) பொதுமக்கள் தெரிவிக்கும் புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சியில் அலுவலா்கள், பொறியாளா்கள், பணியாளா்கள், தூய்மைப்

பணியாளா்கள் உள்பட 22 ஆயிரம் பேரும், சென்னை குடிநீா் வாரியத்தின் மூலம் 2,149 பேரும் களப் பணியாளா்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com