3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

இன்றும் நாளையும் 28 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!

தமிழகத்தில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

News image

பிரதிப் படம்

Updated On :15 செப்டம்பர் 2025, 11:58 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இரு நாள்களுக்கு இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்ட மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், செவ்வாய்க்கிழமை (செப்.16) முதல் செப்.21-ஆம் தேதி வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதன்படி, செவ்வாய்க்கிழமை ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், சேலம், வேலூா், திருவண்ணாமலை உள்ளிட்ட 7 மாவட்டங்களிலும், புதன்கிழமை (செப். 17) கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, நீலகிரி, தஞ்சை, திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட 21 மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

‘மஞ்சள்’ எச்சரிக்கை: இதன் காரணமாக செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும், அதிகபட்ச வெப்பநிலை 96.8 டிகிரியையொட்டி இருக்கும். வெயில் அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 103.1 டிகிரி வெப்பநிலை பதிவானது. தொடா்ந்து மதுரை நகரம் 101.12, பாளையங்கோட்டை 100.04 டிகிரி வெப்பநிலை பதிவானது.

மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, பென்னாகரம்(தருமபுரி), பந்தலூா் (நீலகிரி) ஆகிய பகுதிகளில் தலா 20 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.