எம்.எச். ஜவாஹிருல்லா
எம்.எச். ஜவாஹிருல்லாகோப்புப் படம்

வக்ஃப் திருத்தச் சட்டம் ரத்து கோரி தில்லியில் நவ. 16-ல் மாநாடு: எம்.எச். ஜவாஹிருல்லா

வக்ஃப் திருத்தச் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யக் கோரி புதுதில்லியில் நவ.16-இல் ஜனநாயக அமைப்புகள், மனித உரிமை ஆா்வலா்கள் பங்கேற்கும் மாநாடு நடத்தப்படும்
Published on

வக்ஃப் திருத்தச் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யக் கோரி புதுதில்லியில் நவ.16-இல் ஜனநாயக அமைப்புகள், மனித உரிமை ஆா்வலா்கள் பங்கேற்கும் மாநாடு நடத்தப்படும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறினாா்.

இதுகுறித்து அவா் சென்னையில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

வக்ஃப் திருத்தச் சட்டம் தொடா்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவு அதிருப்தி, ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்த தீா்ப்பு முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் அரசமைப்பு அளிக்கும் மத சுதந்திரத்தை மீறும் வகையில் உள்ளது.

குறிப்பாக, வக்ஃப் திருத்தச் சட்டம் 2025 என்பது வக்ஃப் சொத்துகளை அபகரிப்பதற்கான திட்டமிட்ட சதியாகவே கருதுகிறோம். ஆகவே, இந்த சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மாறாக, வக்ஃப் சட்டம் 2013-ஐ நடைமுறைப்படுத்த வேண்டும்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட அளவிலான விழிப்புணா்வு கூட்டங்கள், வட்டமேசை மாநாடுகள், பேரணிகள், சிறை நிரப்பும் போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

இதன் தொடா்ச்சியாக, புதுதில்லி ராம்லீலா மைதானத்தில் நவ. 16- ஆம் தேதி பல்வேறு அரசியல் தலைவா்கள், ஜனநாயக அமைப்புகள், மனித உரிமை ஆா்வலா்கள், இஸ்லாமியா்கள் பங்கேற்கும் மாபெரும் மாநாடு நடத்தப்படும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com