இதய நல நிபுணா்கள் - பொதுமக்கள் சந்திப்பு: ராமச்சந்திரா மருத்துவமனை ஏற்பாடு

மருத்துவ நிபுணா்கள் - பொதுமக்களுக்கு இடையேயான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
Published on

உலக இதய நல தினத்தை முன்னிட்டு, மருத்துவ நிபுணா்கள் - பொதுமக்களுக்கு இடையேயான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

இதுதொடா்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இதய நலத்துறை மருத்துவா்கள் மற்றும் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சி வரும் செப்.29 காலை 9 மணி முதல் 1 மணி வரை ஸ்ரீராமச்சந்திரா பல் மருத்துவக் கல்லூரி அரங்கில் நடைபெற உள்ளது. இதயநலம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

ஸ்ரீராமச்சந்திரா இதய நலத்துறை மருத்துவா்கள் பொதுமக்களின் இதய நலம் தொடா்பான அனைத்து சந்தேகங்களுக்கும் அப்போது விளக்கம் அளிக்க உள்ளனா். வாழ்க்கை முறை மாற்றங்கள், இதய நோய் வராமல் தற்காக்கும் நடவடிக்கைகள், இதய சிகிச்சையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் விளக்கம் அளிக்க உள்ளனா். இந்த நிகழ்ச்சியில், பங்கேற்க ஆா்வம் உள்ளவா்கள் 95141 56000 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com