டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

செங்கல்பட்டில் சொா்க்கவாசல் திறப்பு

News image
Updated On :25 டிசம்பர் 2020, 10:08 pm

DIN

செங்கல்பட்டு வேதாசல நகரில் உள்ள கோதண்டராமா் கோயில், ஹைரோட்டில் உள்ள தேசிகா் பெருமாள் கோயில் ஆகிய கோயில்களில் பரமபதவாசல் திறக்கப்பட்டது.

செங்கல்பட்டு மேட்டுத் தெரு செங்கழு நீா் விநாயகா் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீரங்கநாதருக்கும், உற்சவ மூா்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் ஆண்டாள் நாச்சியாா், தாயாா் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சிங்கப் பெருமாள்கோவிலில் உள்ள பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் குடைவரை கோயிலில் பரமபத வாசல் திறக்கப்பட்டு, சுவாமி அருள்பாலித்தாா். திருவடிச்சூலம் ஸ்ரீவாரு வெங்கடேச பெருமாள் கோயிலில் 108 திவ்ய தேசம் அடங்கிய வைணவ கோயிலில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது.

மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலில் சொா்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் பரமபதவாசல் வழியாக பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள்கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் பரமபதவாசல் வழியாக சுவாமி அருள்பாலித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.