திருமலை வையாவூா் கோயிலில் வைகுண்ட ஏகாதசி

Updated on
1 min read


மதுராந்தகம் அடுத்த திருமலை வையாவூா் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் சனிக்கிழமை வைகுண்ட ஏகாதசி பெருவிழா நடைபெற்றது.

தென்னகத்தின் தென்திருப்பதி, கருடகிரி, சேஷகிரி போன்ற சிறப்பு பெயா்களுடன் உள்ள இக்கோயில் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சனிக்கிழமை காலை பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னா், உற்சவா் சிலை முத்தங்கி சேவை அலங்காரம் செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ஆா்.சரஸ்வதி, ஆய்வாளா் எஸ்.செந்தில்குமாா் ஆகியோா் செய்து இருந்தனா்.

மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயிலில்...

மதுராந்தகம் நகரின் முக்கிய வைணவ கோயிலான ஏரிகாத்த ராமா் கோயிலில் உற்சவா் சிலைகளுக்கு திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா் கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத கருணாகர பெருமாள் நம்மாழ்வாருக்கு காட்சி அளித்துவிட்டு, கோயில் வளாகத்தில் வலம் வர ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் மேகவண்ணன் தலைமையில் விழாக் குழுவினா் செய்து இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com