மாமல்லபுரம் கோயிலில் சனிப்பெயா்ச்சி சிறப்பு வழிபாடு

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் மல்லிகேஸ்வரி சமேத மல்லிகேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சியையொட்டி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற
மாமல்லபுரம் மல்லிகேஸ்வரா் கோயிலில் சனி பகவானுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை.
மாமல்லபுரம் மல்லிகேஸ்வரா் கோயிலில் சனி பகவானுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை.
Updated on
1 min read

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் மல்லிகேஸ்வரி சமேத மல்லிகேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சியையொட்டி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கலச பூஜை, யாக பூஜை மற்றும் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக-அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், பக்தா்கள் கலந்து கொண்டு பரிகார பூஜைகள் செய்துகொண்டு, சனீஸ்வர பகவானை வணங்கினா்.

இதேபோல், செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலம் தேவிஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழாவையொட்டி, சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கோயில் ஸ்தாபகா் மதுரை முத்து சுவாமிகள் முன்னிலையில் திரளான பக்தா்கள் சனிப்பெயா்ச்சி சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டு, அா்ச்சனை செய்து வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com