பாடலாத்ரி நரஸிம்ம ஸ்வாமி கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம்
செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள் கோயில் பாடலாத்ரி நரஸிம்ம ஸ்வாமி கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்தில் 7ஆம் நாள் வியாழக்கிழமை தேர்த் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.


செங்கல்பட்டு: செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள் கோயில் பாடலாத்ரி நரஸிம்ம ஸ்வாமி கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்தில் 7ஆம் நாள் வியாழக்கிழமை தேர்த் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் உள்ளது.
இக்கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி பிரமோற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயிலில் நரசிம்மசுவாமி உக்கிரத்துடனும் முக்கண்ணுடனும் அமர்ந்த கோலத்தில் நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் அருளும் சுவாமியாக அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார். இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பிரம்மோற்சவம் நடைபெறும்.
துவாஜரோஹணம், புண்ணியகோடி விமானம் கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவில் 7ஆம் நாளாகிய வியாழக்கிழமை தேர் திருவிழா நடைபெற்றது.
தேரோட்ட விழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது. இதேபோன்ற உற்சவ மூர்த்திக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. இதனையடுத்து உற்சவ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கோயிலில் இருந்து புறப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்த தேரில் பெருமாள் எழுந்தருள ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். தேர் கோயிலில் இருந்து புறப்பட்டு தேசிய நெடுஞ்சாலை வழியாக மாடவீதிகளை வலம் வந்தேன் தேர் நிலையில் நின்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தேரோட்டம் நடந்த பாதைகள் எல்லாம் ஆன்மீக பக்தர்கள் அன்னதானம் நீர் மோர் குளிர்பானம் ஆகியவைகளை வழங்கினர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் வெங்கடேசன், கோயில் பணியாளர்கள் பட்டாச்சாரியார்கள் விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...