மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் அறுபத்து மூவர் விழா

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறும் சித்திரைப் பெருவிழாவையொட்டி

Published On :

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறும் சித்திரைப் பெருவிழாவையொட்டி 3ஆம் நாள் சனிக்கிழமை வெள்ளி அதிகார நந்தி கிரி பிரதக்ஷணம் மற்றும் 63 நாயன்மார்கள் உற்சவ ஊர்வலம் வெகுசிறப்பாக விழா நடைபெற்றது.

Story image

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம்   திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் மலைக்கோயில், பக்தவத்சலேஸ்வரர்  தாழக் கோயிலில் 1800 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயில் உள்ளது. பட்சி தீர்த்தம் கழுதொழும் சிவனாக வீற்றிருக்கும் வேதகிரீஸ்வரர் கோயிலில்   சித்திரைப் பெருவிழா கடந்த மே 5ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 15ந்தேதி வரை நடைபெறுகிறது .

இவ்விழாவின் 3 ஆம் நாள் உற்சவமாக சாமி மற்றும் 63 நாயன்மார்கள் உற்சவ மூர்த்திகள் பக்தவத்சலேஸ்வரர் தாளக் கோயிலில் இருந்து புறப்பட்டு வேதகிரீஸ்வரர் மலைகிரி பிரதக்ஷண ஊர்வலம்  நடைபெற்றது.

Story image

இவ்விழாவையொட்டி சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. 63 நாயன்மார்கள் உற்சவ விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமியை தரிசனம் செய்தனர். வழிநெடுகிலும் ஆன்மீக பக்தர்கள் அன்னதானங்கள், குளிர்பானங்கள்,  தண்ணீர் என வழங்கினர்.

Story image

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர்  லட்சுமிகாந்தன், பாரதி தாசன் , செயல் அலுவலர் மேகவண்ணன் , தக்கார் மற்றும் செயல் அலுவலர்  வெங்கடேசன், மேலாளர் விஜி கோயில் சிவாச்சாரியார்கள், பணியாளர்கள் உற்சவ உபயதாரர்கள் மற்றும் நகர பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.