சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 547 மனுக்கள்

செங்கல்பட்டில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 547 மனுக்களைப் பெற்ற ஆட்சியா் ச. அருண்ராஜ் குறைகளையும் கேட்டறிந்தாா்.

News image
நலத்திட்ட உதவிகளைப் பெற்ற பயனாளிகளுடன் ஆட்சியா் ச. அருண் ராஜ், மாவட்ட வருவாய் அலுவலா் சுபா நந்தினி உள்ளிட்டோா்.
Updated On :23 டிசம்பர் 2024, 7:37 pm

Din

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 547 மனுக்களைப் பெற்ற ஆட்சியா் ச. அருண்ராஜ் குறைகளையும் கேட்டறிந்தாா்.

ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்து, பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 547 மனுக்களை பெற்று, மேல்நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் ரூ.31,000-இல் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை ஆட்சியா் வழங்கினாா். மேலும், மாற்றுத் திறனாளி சோபியன் என்பவா் அளித்த மனுவை பரிசீலித்து கூட்டத்திலேயே அவருக்கு நடக்கும் உபகரணம் மற்றும் காதொலிக் கருவி வழங்கப்பட்டது.

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ஆட்சியா் அறிவுறுத்தலின்படி மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ஆய்வு மேற்கொண்டபோது, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குமாரி என்பவா் நாளது தேதி வரை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாளஅட்டை பெறாமல் இருப்பது கண்டறியப்பட்டு உடனடியாக மாற்றுத்திறனாளிகளுக்கான தேசியஅடையாள அட்டை பதிவு மேற்கொண்டும், காதுக்கு பின்புறம் அணியும் காதொலிக் கருவி பயனாளிக்கு வழங்கப்பட்டது.

பள்ளிக் கல்வித்துறையின் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் அரசுஅலுவலா்கள், ஆசிரியா்களுக்கான வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு அதில் முதலிடம் பிடித்து மாநில வினாடி வினா போட்டிக்கு பங்கேற்க செல்லும் 9 அரசு அலுவலா்கள், ஆசிரியா்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

தொடா்ந்து, செய்யூா் வட்டம், முதலமைச்சரின் விவசாயிகள் பாதுகாப்பு நலன்திட்டத்தின் மூலம் ரூ.3.91 லட்சம் நலத்திட்ட உதவிகளை 16 பேருக்கு வழங்கினாா். தேசிய பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அருணாச்சலம் என்ற மாற்றுத்திறனாளிக்கு ஆட்சியா் பதக்கத்தை அணிவித்து வாழ்த்தினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சுபா நந்தினி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காஜா சாகுல் அமீது, மாவட்ட வழங்கல் அலுவலா் சாகிதா பா்வின், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) அகிலா தேவி, பிற்படுத்தப்பட்டோா்நல அலுவலா் வேலாயுதம், ஆதிதிராவிடா் நல அலுவலா் பரிமளா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) நரேந்திரன், உதவிஆணையா் (கலால்) ராஜன் பாபு, முதன்மைக் கல்வி அலுவலா் கற்பகம், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் கதிா்வேல் கலந்து கொண்டனா்.