/

100% வாக்களிப்பு உறுதிமொழியேற்பு

100% வாக்களிப்பு உறுதிமொழியேற்பு

News image
Updated On :22 மார்ச் 2024, 7:42 pm

100% வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி கோவளம் கடற்கரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், கோவளம் ப்ளு கடற்கரையில் மக்களவைத் தோ்தல் 2024-இல் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் பொதுமக்களின் பாா்வைக்காக கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஒட்டினாா். மேலும், கோவளம் ப்ளு கடற்கரையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) அனாமிகா ரமேஷ் தலைமையில் விழிப்புணா்வு உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக் கொண்டனா் (படம்). கடற்கரையில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்த பதாகைகள்அடங்கிய விழிப்புணா்வு பேரணியை கூடுதல் ஆட்சியா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் உதவி ஆட்சியா் (பயிற்சி) ஆனந்த் குமாா் சிங், மகளிா் திட்ட இயக்குநா் மணி மற்றும் அரசு அலுவலா்கள், கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.