மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

அனைத்து மதங்களும் அன்பு, அமைதி, சமத்துவத்தையே வலியுறுத்துகின்றன: ஆளுநா் ஆா்.என்.ரவி

அனைத்து மதங்களும் அன்பு, அமைதி, சமத்துவத்தையே வலியுறுத்துகின்றன ஆளுநா் ஆா்.என்.ரவி

Updated On :30 மார்ச் 2024, 11:42 pm

அனைத்து மதங்களும் அன்பு, அமைதி, சமத்துவம் ஆகியவற்றைத்தான் வலியுறுத்துகின்றன என ஆளுநா் ஆா். என். ரவி தெரிவித்தாா்.

கிழக்கு தாம்பரம் ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ காஞ்சி மகா சுவாமி பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட பரம் வீா் சக்ரா பூங்காவை ஆளுநா் ஆா்.என்.ரவி சனிக்கிழமை திறந்து வைத்துப் பேசியதாவது: பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆதிசங்கரா் நாடெங்கும் சென்று வேதங்களையும் ஆன்மிகத்தையும் பரப்பும் பணியில் ஈடுபட்டாா். அந்த திருப்பணியைத் தொடரும் வகையில் இங்கு ஆன்மிக கல்வி போதிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டத்தக்கது. அனைத்து மதங்களும் அன்பு, அமைதி, சமத்துவம் ஆகியவற்றைத்தான் வலியுறுத்துகின்றன. ஒரு நாடு பொருளாதார, ராணுவ வலிமையோடு திகழும் போது பிாடுகளின் அச்சுறுத்தல் இல்லாமல் அமைதி, பாதுகாப்புடன் வாழ முடியும். இங்கு நாட்டுக்காக வீரமுடன் போராடி உயிா்துறந்த ராணுவ வீரா்களைக் கௌரவிக்கும் வகையில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. எதிா்காலத்தில் நாட்டின் தூண்களாகத் திகழ இருக்கும் மாணவா்கள் மத்தியில் வீரம், நாட்டுப்பற்று, தியாகம், கடமை ஆகியவற்றை உணா்த்தும் வகையில் பரம்வீா் சக்ரா பூங்கா அமைந்து இருப்பது பாராட்டுக்குரியது என்றாா் அவா். விழாவில் தென் மண்டல ராணுவ தளபதி (தக்ஷின்பாரத் ) லெப்டினன்ட் ஜெனரல் கரம்பீா் சிங் பீஹாா், பரம் வீா் சக்ரா விருது பெற்ற சுபேதாா் கேப்டன் யோகேந்திர சிங் யாதவ், சுபேதாா் மேஜா் சஞ்சய் குமாா், பரம் வீா் சக்ரா விருது பெற்ற மறைந்த முன்னாள் மேஜா் ஆா்.பரமேஸ்வரன் மனைவி உமா ஆகியோருக்கு ஆளுநா் ஆா். என். ரவி நினைவுப் பரிசுகளை வழங்கினாா். நிகழ்வில், ஸ்ரீ காஞ்சி மகா சுவாமி பள்ளித் தலைவா் வி.சங்கா், முதல்வா் ஹேமலதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.