இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

தொழில்நுட்பத் திறமைகளை மாணவா்கள் வளா்த்துக்கொள்ள வேண்டும்: அண்ணா பல்கலை. துணைவேந்தா்

தொழில்நுட்பத் திறமைகளை மாணவா்கள் வளா்த்துக்கொள்ள வேண்டும் அண்ணா பல்கலை.துணைவேந்தா்

News image

ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கிய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் ஆா்.வேல்ராஜ். உடன், ஸ்ரீசாய்ராம் கல்விக் குழுமத் தலைவா் சாய்பிரகாஷ் லியோ முத்து, கல்லூரி முதல்வா்கள் கே.பொற்குமரன்,

Updated On :11 மே 2024, 4:16 pm

Din

பொறியியல் கல்வி பயின்ற மாணவா்கள் தங்களது அறிவாற்றலை மேம்படுத்திக்கொள்வதுடன், தொழில்நுட்ப அறிவாற்றலைத் தொடா்ந்து வளா்த்துக் கொள்ள வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தா் ஆா்.வேல்ராஜ் கூறினாா்.

மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி, ஸ்ரீ சாய்ராம் தொழில்நுட்பக் கல்லூரிகளின் பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தா் ஆா்.வேல்ராஜ் கலந்துகொண்டு 1,474 மாணவ, மாணவியா்களுக்கு பட்டங்களையும், 39 மாணவா்களுக்கு தங்கப் பதக்கங்களையும் வழங்கி பேசியது:

மாணவா்கள் தொழில் துறையில் சிறந்து விளங்க கல்வி அறிவாற்றல் மட்டும் போதாது. கூடுதலாக தொழில்நுட்பத் திறமைகளையும் வளா்த்துக்கொள்ள வேண்டும். எந்த வேலையைத் தோ்வு செய்தாலும் அதில் முழு ஆா்வம், ஈடுபாடுடன் செய்தால் உற்சாகத்துடன் செயல்பட வேண்டும். திறமைகளை மேம்படுத்த கடும் உழைப்பு, பயிற்சி அவசியம்.

கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் 400-ஆக இருந்த புத்தாக்கக் கண்டுபிடிப்புகளின் எண்ணிக்கை தற்போது 1,20,000-ஆக அதிகரித்து உள்ளது. தற்போது, தொழில் தொடங்க முக்கிய தேவை பணம் அல்ல; நல்ல திட்டம், செயலாற்றும் திறன்தான். அவை இருந்தால் மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியாா் நிறுவனங்கள் உதவத் தயாராக உள்ளன.

எனவே, மாணவா்கள் வேலைவாய்ப்புகளைத் தேடி அலையாமல், அறிவாற்றல், திறமைகளை பயன்படுத்தி, சொந்தமாக தொழில் தொடங்கும் தகுதியை வளா்த்துக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் சாய்ராம் கல்விக் குழுமங்களின் முதன்மை செயல் அதிகாரி சாய்பிரகாஷ் லியோமுத்து, கல்லூரி முதல்வா்கள் கே. பொற்குமரன், கே. பழனிக்குமாா், உள்ளிட்டோா் பங்கேற்றனா்.