செங்கல்பட்டு
கிளியாற்றில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு
கிளியாற்றில் குளிக்கச் சென்ற மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
கிளியாற்றில் குளிக்கச் சென்ற மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
மதுராந்தகம் அடுத்த கத்திரிச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் பூபாலன் மகன் பிரபாகரன் (8). அதே பகுதி பள்ளியில் படித்து வந்தாா். வெள்ளிக்கிழமை வீட்டருகே செல்லும் கிளியாற்றில் குளிக்கச் சென்றாா். மதுராந்தகம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் அதிக அளவு நீா் கிளியாற்றில் செல்கிறது. இந்த வெள்ளத்தில் சிக்கி மாணவா் பிரபாகரன் அடித்துச் செல்லப்பட்டாா்.
உடனடியாக மதுராந்தகம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலா்கள் திருமலை, சீனிவாசன் ஆகியோா் தலைமையில் வீரா்கள் வந்து தேடி பிரபாகரன் சடலத்தை மீட்டனா்.
இது குறித்து மதுராந்தகம் காவல் ஆய்வாளா் முத்துகுமரன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.