மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கட்டைப் பையில் வைத்து ஏரிக்கரையில் வீசப்பட்ட ஆண் குழந்தை

பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை கட்டைப் பையில் வைத்து மரக்கிளையில் மாட்டிச் சென்றுள்ளனா்.

News image
Updated On :6 செப்டம்பர் 2024, 12:28 am

Din

திருவடிசூலம் அடுத்த சென்னேரி அருகே பெருந்தண்டலம் கிராம ஏரிக்கரையில், பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை கட்டைப் பையில் வைத்து மரக்கிளையில் மாட்டிச் சென்றுள்ளனா்.

இந்த ஏரிக்கரையில் பெண் ஒருவா் மாடு மேய்த்து கொண்டிருந்தபோது, அந்தப் பகுதியில் குழந்தை அழும் சப்தம் கேட்டு அவா் குழந்தையைத் தேடியபோது, ஏரிக்கரையில் மரத்தில் ரத்தக் கரையுடன் கட்டைப் பையில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை இருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

அவா், காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற செங்கல்பட்டு கிராமிய போலீஸாா் குழந்தையை 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அந்த ஆண் குழந்தைக்கு பச்சிளங்குழந்தைகள் பிரிவில் சோ்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏரிக்கரையில் குழந்தையை கட்டைப் பையில் வைத்து சென்றது நபா் குறித்து செங்கல்பட்டு கிராமிய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.