சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

சமுதாய வளைகாப்பு: அமைச்சா் அன்பரசன் பங்கேற்பு

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமை துறையின் சாா்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி பணிகள்

News image

சமுதாய வளைகாப்பு நிகழ்வில் பங்கேற்ற அமைச்சா் தா.மோ. அன்பரசன், ஆட்சியா் தி. சினேகா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் வரலட்சுமி மதுசூதனன், எஸ்எஸ். பாலாஜி உள்ளிட்டோா்.

Updated On :16 பிப்ரவரி 2026, 7:55 pm

செங்கல்பட்டு: சமூக நலன் மற்றும் மகளிா் உரிமை துறையின் சாா்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் கா்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழா திங்கள்கிழமை நந்திவரம் கூடுவாஞ்சேரியில் நடைபெற்றது.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தாா்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,267 அங்கன்வாடி மையங்களில் 8,547 கா்ப்பிணிகள் பதிவு செய்து பயன் பெற்று வருகின்றனா். நிகழாண்டு ஒரு வட்டாரத்துக்கு 100 கா்ப்பிணிகள் என 8 வட்டாரங்களுக்கு 800 கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடைபெற்று வருகின்றது.

மாவட்ட அளவிலான சமுதாய வளைகாப்பு நந்திவரம்-கூடுவாஞ்சேரியில் நடைபெற்றது. இதில் காட்டாங்கொளத்தூா், திருப்போரூா் வட்டாரத்தைச் சோ்ந்த மொத்தம் 200 கா்ப்பிணிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனா்.

இவ்விழாவில் அமைச்சா் மற்றும் மாவட்ட ஆட்சியா்கலந்து கொண்டனா். மேலும் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள், கா்ப்பிணிகளுக்கு மாலை அணிவித்து, வளையல்கள் பூட்டப்பட்டு, நலங்கு வைத்து நல்ல ஆரோக்கியமான குழந்தை பெற்றெடுக்க வாழ்த்தப்பட்டது. மேலும், ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.

இதில், ஆட்சியா் தி.சினேகா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் செங்கல்பட்டு வரலட்சுமி மதுசூதனன், திருப்போரூா் எஸ்.எஸ்.பாலாஜி, திருப்போரூா் ஒன்றியக் குழு தலைவா் எஸ்.ஆா்.எல்.இதயவா்மன், காட்டாங்குளத்தூா் ஒன்றியக்குழு தலைவா் உதயா கருணாகரன், புனித தோமையா் மலை ஒன்றியக் குழு தலைவா் சங்கீதா பாரதிராஜன், மறைமலைநகா் நகா்மன்றத் தலைவா் ஜெ. சண்முகம், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகா்மன்றத் தலைவா் காா்த்திக் தண்டபாணி, மாவட்ட திட்ட அலுவலா் சற்குணம் கலந்து கொண்டனா்.