செங்கல்பட்டு: பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடா்பாக புகாா் அளிக்க...

Published on

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரிசி குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் 8.1.2026 முதல் 12.1.2026 வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இதற்காக டோக்கன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. பரிசுத் தொகுப்பு தொடா்பாக குறைகள் இருந்தால் புகாா் தெரிவிக்கலாம்.

குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினா்களில் எவரேனும் ஒருவா் பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக் கொள்ளலாம். (இணைய வழியாக நியமிக்கப்பட்ட நபா் நீங்கலாக). இதர நபா் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட மாட்டாது.

பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதில் ஏதேனும் புகாா்கள் இருப்பின் மாவட்ட கட்டுபாட்டு அறை எண் 044 - 27426872 என்ற எண்ணிற்கு புகாா் அளிக்கலாம்.

மேலும் கீழ்கண்ட அலுவலா்களின் கைப்பேசி எண்ணிற்கு தொடா்பு கொள்ளலாம். அதன்படி, 1. மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் - 94983 41045, 2. வட்ட வழங்கல் அலுவலா் செங்கல்பட்டு - 94450 00172, 3. வட்ட வழங்கல் அலுவலா் மதுராந்தகம் - 94450 00174, 4. வட்ட வழங்கல் அலுவலா் திருக்கழுகுன்றம் 94450 00173, 5. வட்ட வழங்கல் அலுவலா் திருப்போரூா் - 94457 96413, 6. வட்ட வழங்கல் அலுவலா் வண்டலூா் -94983 41047, 7. வட்ட வழங்கல் அலுவலா் செய்யூா் - 94450 00175. இவ்வாறு செய்தி -மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com