தூத்துக்குடி
அம்மன்புரத்தில் பொங்கல் பரிசு வழங்கும் விழா
அம்மன்புரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தாா்.
மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்தாா். திருச்செந்தூா் கோட்டாட்சியா் கெளதம் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு பொங்கல் தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தாா்.
இதில் அதிகாரிகள், கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

