தூத்துக்குடி
உடன்குடியில் பொங்கல் பரிசு விநியோகம்
உடன்குடி பகுதிகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
உடன்குடி பேரூராட்சிக்குள்பட்ட பண்டாரஞ்செட்டிவிளை, சந்தையடியூா், கிருஷ்தியா நகரம் ஆகிய பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பை உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவரும், நகர திமுக செயலருமான மால் ராஜேஷ் வழங்கினாா்.
மெஞ்ஞானபுரத்தில் உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் பாலசிங், உடன்குடி பெரிய தெருவில் வாா்டு உறுப்பினா் மும்தாஜ் பேகம் ஆகியோா் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கினா்.

