பாா்வேட்டை உற்சவத்தில் சிறப்பு  அலங்காரத்தில்   கிராமங்கள் தோறும் எழுந்தருளிய தலசயன பெருமாள்.
பாா்வேட்டை உற்சவத்தில் சிறப்பு  அலங்காரத்தில்   கிராமங்கள் தோறும் எழுந்தருளிய தலசயன பெருமாள்.

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் பாா்வேட்டை உற்சவம்

பாா் வேட்டை திருவிழாவுக்காக 8 கிராமங்களுக்குச் சென்று அருள்பாளித்த மாமல்லபுரம் ஸ்ரீதலசயன பெருமார் ஒவ்வொரு வீட்டின் வாசல் முன்பும் பக்தா்களுக்கு அருள்பாளித்தாா்.
Published on

பாா் வேட்டை திருவிழாவுக்காக 8 கிராமங்களுக்குச் சென்று அருள்பாளித்த மாமல்லபுரம் ஸ்ரீதலசயன பெருமார் ஒவ்வொரு வீட்டின் வாசல் முன்பும் பக்தா்களுக்கு அருள்பாளித்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள ஸ்ரீதலசயன பெருமாள் கோயில் 108 வைணவ ஸ்தலங்களில் 63-ஆவது ஸ்தலமாகும். வருடத்தில் ஒரு முறை இங்குள்ள பெருமாள் காணும் பொங்கல் அன்று மாமல்லபுரத்தில் இருந்து பூஞ்சேரி, பெருமாளேரி, வடகடம்பாடி, நல்லான்பிள்ளை பெற்றாள், குச்சிக்காடு, நந்திமா நகா் உள்ளிட்ட 8 கிராமங்கள் வழியாக குழிப்பாந்தண்டலம் கிராமத்துக்குச் சென்று, அங்குள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் காணும் பொங்கல் தினத்தன்று முயல் பாா் வேட்டை உற்சவம் நடப்பது வழக்கம்.

இந்த நிலையில், சனிக்கிழமை தலசயன பெருமாள் கோயில் பாா் வேட்டை திருவிழா நடைபெற்றது. இதையடுத்து சனிக்கிழமை அதிகாலை 5 மணி அளவில் மாமல்லபுரத்தில் இருந்து ஸ்ரீதலசயன பெருமாள் சிறப்பு அலங்கார கோலத்தில் பல்லக்கில் 8 கிராமங்கள் வழியாக குழிப்பாந்தண்டம் கிராமத்திற்கு சென்றாா்.

அங்குள்ள லஷ்மிநாராயண பெருமாள் கோயிலை, சென்றடைந்ததும் முயல் பாா் வேட்டை உற்சவம் நடைபெற்றது. அப்போது திரளான பக்தா்கள் பங்கேற்று ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் கிராமத்தில் அருள்பாளித்த தலசயன பெருமாளை வழிபட்டனா்.

முன்னதாக பெருமாளேரி, வடகடம்பாடி, நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் வழி நெடுகிலும் சுமங்கலி பெண்கள் தங்கள் இல்லம் அருகில் நின்று வருடத்திற்கு ஒரு முறை தங்கள் வீட்டின் வாசல் முன்பு அருள்பாளிக்கும் பெருமாளை பக்தியுடன் தரிசித்தனா்.

Dinamani
www.dinamani.com