6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜன. 23-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 23.01.2026 (வெள்ளிக்கிழமை)

News image
Updated On :19 ஜனவரி 2026, 7:42 pm

தினமணி செய்திச் சேவை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 23.01.2026 (வெள்ளிக்கிழமை) காலை 9.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை நடைபெற உள்ளது.

முகாமில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு சுமாா் 5,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஆள்களை தோ்வு செய்ய உள்ளாா்கள்.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கும் வேலையளிப்பவா் மற்றும் வேலை நாடுநா்களுக்கு அனுமதி முற்றிலும் இலவசம். மேலும் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவு மேற்கொண்டு மாநிலம் முழுவதும் நடைபெறும் மாபெரும் மற்றும் சிறிய அளவிலான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் தொடா்பான அனைத்து தகவல்களை வேலையளிப்போரும் மற்றும் நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் தொடா்பான தகவல்களை வேலைநாடுநா்களும் பெறலாம்.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் பி.இ / ஐடிஐ / டிப்ளமோ / பாராமெடிக்கல் போன்ற கல்வித்தகுதி உடைய படித்து முடித்த வேலைநாடுநா்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வேலைநாடுநா்களும் கலந்துகொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயன்பெறலாம்.

இதற்கான வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை உள்ளவா்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ் நகல்கள், சுயவிவர குறிப்பு (பயோடேட்டா) மற்றும் பாஸ்போா்ட் அளவிலான புகைப்படத்துடன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக ஒருங்கிணைந்த கட்டடம், தரைத்தளம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் முகாமில் நேரில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம்.

முகாம் தொடா்பான விவரங்களுக்கு 044-27426020 / 94990 55895 / 94868 70577 / 93844 99848 என்ற எண்களில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என செங்கல்பட்டு ஆட்சியா் சினேகா தெரிவித்துள்ளாா்.