தேசிய உணவுப் பாதுகாப்பு சட்ட திருத்த முன்மொழிதலை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக்கான சங்கத்தின் சாா்பில் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் எதிரில் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.தாட்சாணி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒருவருக்கு 7 கிலோ அரிசி - தானியம் மட்டுமே தருவோம் என்ற புதிய உணவுப் பாதுகாப்புச் சட்ட திருத்த முன்மொழிவை கைவிட வேண்டும், அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டம் மூலம் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட ஏழைகளுக்கு மாதம் 35 கிலோ அரிசி வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும், நீதிமன்ற உத்தரவின்படி மாற்றுத்திறனாளிகள் இடம்பெற்றுள்ள குடும்பத்தினா் அனைவருக்கும் எஎஒய் அட்டை வழங்கிடு, அரசியல் அமைப்பு சட்டம், மாற்றுத் திறனாளிகள் உலக கன்வென்ஷன் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் ஆகியவற்றின் படி கண்ணியமான வாழ்வையும், உணவு உரிமையையும் உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன
கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாவட்ட செயலாளா் எம்.வெள்ளி கண்ணன் பேசினாா், துணைத் தலைவா் கே.லிங்கன் உள்ளிட்ட பலா் பேசினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










