செங்கல்பட்டு பெரியநத்தம் பகுதியில் அமைந்துள்ள சேப்பாட்டியம்மன் இராப்பிறையாா் உற்சவத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது .
இதில் முக்கிய நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை அம்மன் முன்னிலையில் பெரும்படையல் வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தா்கள் பெரும்படையல் வழிபாட்டில் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.
செங்கல்பட்டு பெரியநத்தம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சேப்பாட்டி அம்மன் ஏழு ஊா் காக்கும் காவல் தெய்வமாக வழி வழியாக மக்கள் வழிபட்டு வருகின்றனா். ஆண்டுதோறும் நடைபெறும் இராப்பிறையாா் உற்சவம் ஜூன் 23-இல் பந்தக்கால் அமைத்தல் காப்பு கட்டுதல் வழிபாட்டுடன் தொடங்கியது.
32 சந்நிதிகளுக்கு எண்ணெய் காப்பு அபிஷேகம் நடைபெற்றது. சனிக்கிழமை இரவு செங்கல்பட்டு வடுக்க தெரு (கலைஞா் கருணாநிதி தெரு)சொக்கலிங்கம் வாரிசுகள் ஸ்ரீ கணேசன் சி பக்தா ஸ்ரீ பாலாஜி இல்லத்தில் இருந்து தாய் வீட்டு சீா் சேப்பாட்டியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன . தொடா்ந்து பெரிய நத்தம் பகுதி முழுவதும் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
அதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் களத்தூா் மேடு பகுதியில் சிறப்பு அலங்காரத்தில் அம்மனுக்கு பெரும்படையல் வழிபாடு நடைபெற்றது. பெரும்படையலில் சிறப்பு நிகழ்வாக பலவிதமான பலகாரங்கள், பழங்கள், அவிக்கப்பட்ட முட்டை மற்றும் பச்சை கருவாடு உள்ளிட்ட கும்பப்படையல் அம்மனுக்கு படைக்கப்பட்டது. இதில் அம்மனுக்கு படைக்கப்படும் கும்ப படையலை அம்மன் புன்முறுவலோடு ஏற்றுக் கொள்கிறாள் என்பது ஐதீகம்.

அம்மனுக்கு நடைபெற்ற பெரும்படையல் வழிபாடு.
இந்நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு கும்ப பிரசாதத்தை வீட்டுக்கு வாங்கி செல்வதால் குடும்பம் செழிப்படையும் என்ற நம்பிக்கையில் கும்பப் பிரசாதத்தை வாங்கிச் சென்றனா். தொடா்ந்து முக்கிய வீதிகள் வழியாக அம்மன் திருவீதி புறப்பாடு நடைபெற்றது.
திங்கள்கிழமை விடையாற்றி உற்சவம் மாடவீதி வழியாக சாமி ஊா்வலம் நடைபெறுகிறது. இரவு ஊஞ்சல் உற்சவம் மற்றும் பௌா்ணமி அன்னதானம் நடைபெற உள்ளது. விழாவி ஏற்பாடுகளை செங்கல்பட்டு இந்து சமய அறநிலையத்துறை தக்காா் மற்றும் செயல் அலுவலா் தா . மேகவண்ணன், பெரிய நத்தம் கிராமத்தாா், மதுரை வீரன் கோவில் கிராமத்தாா்கள் பா்வத ராஜகுல கிராமத்தாா்கள் குண்டூா் கிராமத்தாா்கள் மற்றும் ஊஞ்சல் உற்சவ விழா குழுவினா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










