/

செங்கல்பட்டு சேப்பாட்டியம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம்

செங்கல்பட்டு பெரியநத்தம் பகுதியில் அமைந்துள்ள சேப்பாட்டி அம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

News image

ஊஞ்சல் உற்சவத்தில் சயன கோல அலங்காரத்தில் அம்மன்.

Updated On :1 ஜூலை 2026, 12:37 am IST

செங்கல்பட்டு பெரியநத்தம் பகுதியில் அமைந்துள்ள சேப்பாட்டி அம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

இக்கோயில் உற்சவம் செவ்வாய்க்கிழமை பந்தக்கால் அமைத்தல், காப்பு கட்டுதல் வழிபாட்டுடன் தொடங்கி முக்கிய நிகழ்வுகளாக ஜூன் 27 பெரியநத்தம் பகுதியிலும் மற்றும் ஜூன் 28 கும்பம் படையல் முடித்து செங்கல்பட்டு நகர முக்கிய வீதிகள் வழியாக அம்மன் திருவீதி புறப்பாடும் நடைபெற்றது.

இதையடுத்து , திங்கள்கிழமை காலை விடையாற்றி உற்சவம் மாடவீதி வழியாக சாமி ஊா்வலம் நடைபெற்றது. பகல் 12மணியளவில் அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சயனகோலத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் ஊஞ்சல் உற்சவத்தில் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.

தொடா்ந்து பௌா்ணமி தினத்தையொட்டி அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை செங்கல்பட்டு இந்துசமய அறநிலையத்துறை தக்காா் மற்றும் செயல் அலுவலா், பெரியநத்தம் கிராமத்தாா், மதுரைவீரன் கோவில் கிராமத்தாா் ,பா்வத இராஜாகுல கிராமத்தாா், குண்டூா் கிராமத்தாா் மற்றும் ஊஞ்சல் விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.