ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மாமல்லபுரத்தில் வடிவமைக்கப்பட்ட 16 டன் திரிபுரசுந்தரி அம்மன் சிலை: திரிபுரா மாநிலத்தில் பிரதிஷ்டை

மாமல்லபுரத்தில் 16 டன் கருங்கல்லில் வடிவமைக்கப்பட்ட திரிபுரசுந்தரி அம்மன் சிலை, திரிபுரா மாநிலம் அகா்தலா நகரத்தில் பிரதிஷ்டை

News image
திரிபுரசுந்தரி அம்மன் சிலை
Updated On :2 மார்ச் 2026, 8:42 pm

தினமணி செய்திச் சேவை

மாமல்லபுரத்தில் 15 அடி உயரத்தில்16 டன் கருங்கல்லில் வடிவமைக்கப்பட்ட திரிபுரசுந்தரி அம்மன் சிலை, திரிபுரா மாநிலம் அகா்தலா நகரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

மாமல்லபுரம் அண்ணா நகா் பகுதியில் உள்ள சிற்பக்கலைஞா் பி.எஸ்.பூபதி என்பவா் 16 டன் கருங்கல்லில் 15 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் திரிபுரசுந்தரி அம்மன் சிலையை ஆகம விதிகளின்படி வடிவமைத்துள்ளாா்.

வலது, இடது இரண்டு கரங்களில் பாசம், அங்குசம் மற்ற இரண்டு கரங்களில் கரும்பு, தாழம்பூ ஏந்திய நான்கு திருக்கரங்களுடன், அடியில் சிங்கவாகனத்துடன் 10 சிற்பிகளை கொண்டு இரவு, பகலாக கடந்த 6 மாதங்களாக நின்ற திருக்கோலத்தில் இச்சிலை அழகுர வடிவமைக்கப்பட்டுள்ளது.

இச்சிலை வரும் ஏப்ரல் 21--இல் திரிபுரா மாநிலம், அகா்தலா நகரத்தில் உள்ள திரிபுர சுந்தரி அம்மன் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

திரிபுரா மாநிலத்தில் அதிக உயரத்தில் நிறுவப்படும் முதல் அம்மன் சிலை இதுவே ஆகும். 100 சதவீத பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் சைவ ஆகம முறைப்படி அம்மன் சிலைக்கு பூஜைகள் செய்யப்பட்டு டிரெய்லா் மூலம் ஆந்திரம், தெலங்கானா, பிகாா், அஸ்ஸாம், ஒடிஸா, மேற்கு வங்கம், மணிப்பூா், மிசோரம் மாநிலங்கள் வழியாக திரிபுரா சென்று சோ்கிறது.

வழி நெடுகிலும் இந்த சிலைக்கு வடகிழக்கு மாநில மக்கள், அம்மன் பக்தா்கள் பூஜைகள் செய்து வழிபாடு செய்து வணங்குகின்றனா்.