டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ரூ.3.73 கோடியில் மதுராந்தகம் பேருந்து நிலையம் திறப்பு

News image
Updated On :4 மார்ச் 2026, 6:51 pm

தினமணி செய்திச் சேவை

மதுராந்தகத்தில் ரூ.3.73 கோடியில் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையத்தை காணொலி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

மதுராந்தகம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில், தற்போதைய போக்குவரத்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் இல்லாமல் இருந்தது. இதனால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று

கடந்த 16.2.2024-இல் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3.73 கோடியில் பேருந்து நிலைய புதுப்பிக்கும் பணிக்கு மாவட்ட திமுக செயலா் க. சுந்தா் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினாா்.

வேறு இடத்தில் பேருந்து நிலையம் தற்காலிகமாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டு மொத்தம் 59 கடைகள் கட்டப்ப்டுடள்ளன. பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட பேருந்து நிலையத் திறப்புவிழா நடைபெற்றது.

முதல்வா் காணொலி மூலம் திறந்த நிலையில், பேருந்து நிலையத்தில் நகராட்சி ஆணையா் சி. சுகேந்திரன், நகா்மன்றத் தலைவா் கே. மலா்விழி குத்துவிளக்கேற்றினா்.

மண்டல நகராட்சி நிா்வாக இணை இயக்குநா் லட்சுமி, மண்டல செயற்பொறியாளா் சுரேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகராட்சி பொறியாளா் நித்யா, மேற்பாா்வையாளா் அறிவழகன், நகர திமுக செயலா் கே.குமாா் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.