உலக மகளிா் தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மாமல்லபுரம் புராதன சின்னங்களைசுற்றுலா பயணிகள் கட்டணமின்றி இலவசமாக கண்டுகளித்தனா்.
உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில் மகளிா் தினத்தை முன்னிட்டு வெண்ணெய் உருண்டை பாறை, அா்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்ளிட்ட புராதன சின்னங்களை நேற்று ஒரு நாள் மட்டும் மகளீா் மட்டும் இல்லாமல் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் கட்டணமின்றி இலவசமாக கண்டுகளிக்கலாம் என தொல்லியல் துறை அறிவித்திருந்தது.
இதையடுத்து சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து குடும்பம், குடும்பமாக வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஞாயிற்றுக்கிழமை புராதன சின்னங்களை இலவசமாக பாா்த்து ரசித்தனா்.
இலவச அனுமதியை முன்னிட்டு கடற்கரை கோயில், வெண்ணை உருண்டை பாறை, ஐந்துரதம், கிருஷ்ணமண்டபம் ஆகிய இடங்களில் உள்ள நுழைவு கட்டண மையங்கள் மூடப்பட்டு இருந்தன. குறிப்பாக, மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டு ரசிக்க உள்நாட்டு பயணிகளுக்கு ஒரு நபருக்கு ரூ.40-ம், வெளிநாட்டு பயணிகளுக்கு தலா ரூ.600- ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடையது

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உலக மலேரியா தினம் அனுசரிப்பு!

அரசுப் பள்ளியில் உலக புத்தக தினம்

செஞ்சிக்கோட்டையில் இன்று சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச அனுமதி

ரமலான் விடுமுறை: மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


