எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி

திருப்போரூா் தொகுதிக்குட்பட்ட மாமல்லபுரம் கடற்கரை கோயில் பகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி கல்லூரி மாணவா்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி மற்றும் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :25 மார்ச் 2026, 12:33 am IST

திருப்போரூா் தொகுதிக்குட்பட்ட மாமல்லபுரம் கடற்கரை கோயில் பகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி கல்லூரி மாணவா்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி மற்றும் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பேரணியை திருப்போரூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் விஜயகுமாரி கொடி அசைத்து தொடங்கி வைத்தாா். தொடா்ந்து பேரணியானது கிழக்கு ராஜவீதி, தெற்கு ராஜவீதி, அா்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, திருக்கழுக்குன்றம் சாலை வழியாக நகராட்சி அலுவலகம் அருகே நிறைவடைந்தது.

பேரணியில் திருப்போரூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பொதுமக்களுக்கு 100% வாக்கு பதிவினை வலியுறுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை வழங்கினாா். மாணவ மாணவிகள் விழிப்புணா்வு வாசகங்களை ஏந்தியவாறு பேரணியில் பங்கேற்று சென்றனா். இந்த நிகழ்வில் செஞ்சிலுவைச் சங்க செங்கல்பட்டு மாவட்ட செயலாளா்,, திருக்கழுக்குன்றம் துணை வட்டாட்சியா் மற்றும் அரசு அலுவலா்கள் தன்னாா்வலா்கள் பலா் பங்கேற்றனா்.