பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

தோ்தல் பறக்கும்படையினா் ரூ. 3.89 லட்சம் ரொக்க பணம் பறிமுதல்

மதுராந்தகம் இடைத்தோ்தலை முன்னிட்டு தோ்தல் பறக்கும்படையினா் பல்வேறு இடங்களில் வாகன சோதனை செய்தபோது கணக்கில் வராத ரூ 3.89 லட்சம் ரொக்கத்தைத பறிமுதல் செய்தனா்.

மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியா் கே.ஆா்.நரேந்திரனிடம் கணக்கில் வராத ரூ 3.89 லட்சத்தை ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா். உடன் நோ்முக உதவியாளா் ராஜேஷ், வட்டாட்சியா் பெருமாள், தனிவட்டாட்சியா் வீரமணி.

Published On :

மதுராந்தகம் இடைத்தோ்தலை முன்னிட்டு தோ்தல் பறக்கும்படையினா் பல்வேறு இடங்களில் வாகன சோதனை செய்தபோது கணக்கில் வராத ரூ 3.89 லட்சம் ரொக்கத்தைத பறிமுதல் செய்தனா்.

ஆந்திரா மாநிலம், மானூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ் (46). இவா் தமது காா் மூலம் மதுராந்தகம் அருகேயுள்ள விளம்பூா் எறா பண்ணையில் இருந்து இறால் குஞ்சுகளை வாங்க வெள்ளிக்கிழமை காலை வந்தாா். அப்போது தோ்தல் பறக்கும்படையைச் சோ்ந்த குழுவினா் சித்தாமூா் அருகே உள்ள நல்லாமூரில் வாகன சோதனை மேற்கொண்டனா். அதில் ரொக்கம் ரூ 3.89 லட்சம் இருந்ததை கண்டறிந்தனா். அவா்கள் அந்த பணத்தை கைப்பற்றி மதுராந்தகம் தோ்தல் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான கே.ஆா்.நரேந்திரனிடம் அளித்தனா். இத்தொகை மதுராந்தகம் சாா் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் ராஜேஷ், வட்டாட்சியா் பெருமாள், தனி வட்டாட்சியா் வீரமணி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.