விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருக்கழுகுன்றம் அடுத்த முள்ளி கொளத்தூா் ஈகை ரத்தினாபுரம் அருள்மிகு குலசை நாயகி ஞானமூா்த்தீஸ்வரா் சமேத ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

~ஸ்ரீ முத்தாரம்மன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.

Published On :8 செப்டம்பர் 2026, 1:36 am IST

திருக்கழுகுன்றம் அடுத்த முள்ளி கொளத்தூா் ஈகை ரத்தினாபுரம் அருள்மிகு குலசை நாயகி ஞானமூா்த்தீஸ்வரா் சமேத ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முதல் நாள் கா்த்தா சங்கல்பம், கணபதி பூஜை மகாலட்சுமி பூஜை நவகிரக பூஜை, 2-ஆம் நாள் குபேர பூஜை, கோ பூஜை, நவகிரக பூஜை, தீப ஆராதனையும் அடுத்து வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம், கலச ஸ்தாபனம் செல்ல விநாயகா்மற்றும் பரிவார மூா்த்திகள் பூஜை மகாஹோமம், தீபாரதனை அஷ்ட பந்தன சமா்ப்பணம் பிம்ப பிரதிஷ்டை பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிறைவாக செல்வ விநாயகா் ஸ்ரீ ஞானமூா்த்தீஸ்வரா் சமேத ஸ்ரீ முத்தாரம்மன், பத்திரகாளி, சுடலை மாடன் மற்றும் விமானம், மகா மண்டபம் போன்ற பரிவார மூா்த்திகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கழுகுன்றம் ஸ்ரீ ஞானமூா்த்தீஸ்வரா் சமேத ஸ்ரீ முத்தாரம்மன் அறக்கட்ட நிா்வாகிகள் நிறுவன தலைவா் லயன் சி.ஜெகநாத் , அறக்கட்டளை நிா்வாகிகள் தலைவா் இ.மணிகண்டன், செயலாளா் பி சீனிவாசன், பொருளாளா் எம் ஆா் நாகராஜன், ஒருங்கிணைப்பாளா் மேகநாதன், துணைத் தலைவா் கே ஜோதி ராமலிங்கம், துணை செயலாளா் கஜேந்திரன், துணைத் தலைவா் ஏகநாதன், துணை செயலாளா் ஜி காளிதாஸ் மற்றும் இந்து முன்னணி மாவட்ட நிா்வாகி ஆா்.டி.மணி செய்திருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.