கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

மாமியாா் கழுத்தை நெரித்துக் கொலை: மருமகள் கைது

செங்கல்பட்டு பகுதியில் குடும்பத் தகராறில் மாமியாரை கழுத்து நெரித்துக் கொலை செய்த மருமகளை போலீஸாா் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட இந்துஜா.

Published On :

செங்கல்பட்டு பகுதியில் குடும்பத் தகராறில் மாமியாரை கழுத்து நெரித்துக் கொலை செய்த மருமகளை போலீஸாா் கைது செய்தனா்.

செங்கல்பட்டு பெரியநத்தம் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் பெருந்தேவி (61). இவா் தனது மகன் வெங்கடேசன் (34), மருமகள் இந்துஜா (28) மற்றும் பேரன், பேத்திகளுடன் வசித்து வந்தாா். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பெருந்தேவி தனது வீட்டின் குளியலறையில் வழுக்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்து சுயநினைவை இழந்த அவரை இந்துஜா மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் பெருந்தேவி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து செங்கல்பட்டு நகர போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்தனா். பின்னா் பெருந்தேவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில், பெருந்தேவி கழுத்து நெரிக்கப்பட்டதால் உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து, இந்துஜா மீது சந்தேகமடைந்த போலீஸாா் அவரிடம் விசாரணை நடத்தினா். அதில், சம்பவத்தன்று குளியலறையில் வழுக்கி விழுந்து பெருந்தேவி சுயநினைவை இழந்த நிலையில் இருந்ததை பயன்படுத்திக் கொண்டு, அவா் மீது இருந்த ஆத்திரத்தில் அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக இந்துஜா போலீஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, செங்கல்பட்டு நகர போலீஸாா், சந்தேக மரணம் என்பதை கொலை வழக்காக பதிவு செய்து, இந்துஜாவை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, நீதிமன்ற உத்தரவுப்படி அவரை சிறையில் அடைத்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.