"பாரதி படைப்புகளின் உவேசா' என தமிழறிஞர் சீனி விஸ்வநாதனுக்கு தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் புகழாரம் சூட்டினார்.
பாரதி எழுதிய நூல்களை அவரது நண்பர் பரலி.சு. நெல்லையப்பர் பதிப்பித்ததின் நூற்றாண்டு நிறைவு விழா, பாரதி நினைவு நாள், நெல்லையப்பர் விருது வழங்கும் விழா ஆகிய நிகழ்ச்சிகள் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (செப்.10) நடைபெற்றன.
விழாவில், நெல்லையப்பர் விருதை வழங்கி தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் பேசியது:- பாரதி அல்லது நெல்லையப்பர் பெயரில் ஒரு விருது வழங்கப்பட்டால், அதன் முதல் விருதைப் பெறுவதற்கு தகுதியானவர் தமிழறிஞர் சீனி விஸ்வநாதன். உவேசா, பல ஊர்களுக்குச் சென்று, தெருத்தெருவாக அலைந்து, தமிழ் இலக்கிய ஓலைச் சுவடிகளைத் தேடிப்பிடித்து, அச்சிட்டு பாதுகாத்து தந்தார்.அதே போன்று, பாரதியின் படைப்புகளைக் காலவரிசைப் படுத்தி பதிப்பித்து அவற்றைப் பாதுகாத்தவர் சீனி விஸ்வநாதன்.
"தமிழுக்கு உவேசா எப்படியோ, அதேபோன்று பாரதிக்கு சீனி விஸ்வநாதன்' என பல ஆண்டுகளுக்கு முன்னரே கவிஞர் கண்ணதாசன் சீனி விஸ்வநாதனுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். மகாகவி பாரதியாரால் தம்பி என்றழைக்கப்பட்டவர் பரலி. சு. நெல்லையப்பர். பாரதியின் பல படைப்புகளை அச்சிட்டு விற்பனை செய்து பாரதிக்கு உதவியவர். தன் கடைசி மூச்சுவரை பாரதியின் புகழ் பாடி வாழ்ந்தவர். அவர் பெயராலான விருதை நிறுவியிருப்பது பாரதிக்குச் செய்யும் மிகப்பெரிய தொண்டு என்றார் கி.வைத்தியநாதன்.

பாரதி நெல்லையப்பர் மன்றம் சார்பில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் "தினமணி' ஆசிரியர் கி.வைத்தியநாதனிடம் நெல்லையப்பர் விருது பெற்ற (இடமிருந்து) சீனி விஸ்வநாதன் இதழியல் பணி), இராம.குருமூர்த்தி ( பதிப்புத் துறை சேவை), கவிஞர் மணிமேகலை கந்தசாமி (அமிர்தகவி ). உடன் (இடமிருந்து) கவிஞர் நித்ரா, செம்போடை குணசேகரன், பத்திரிகையாளர் கோதை, மதுரை சேகர், எதிரொலி விசுவநாதன், முத்துக்குமாரசாமி, கவிஞர்கள் விஜய் ஆனந்த், கன்னிக்கோயில் ராஜா, கார்முகிலோன், வழக்குரைஞர் கே.ரவி, கவிஞர் விஜய கிருஷ்ணன், இளசை கிருஷ்ணமூர்த்தி.
நெல்லையப்பர் விருதுகள்: இதழியல் பணிக்கான நெல்லையப்பர் விருது' சீனி விஸ்வநாதனுக்கும், "பதிப்புத் துறை சேவை'க்கான விருது மணிவாசகர் பதிப்பகத்தைச் சேர்ந்த இராம.குருமூர்த்திக்கும், "இதழியல் பணிக்கான சிறப்பு விருது' உரத்த சிந்தனை இதழ் ஆசிரியர் உதயம் ராமுக்கும், "அமிர்த கவி விருது' கவிஞர் மணிமேகலை கந்தசாமிக்கும் வழங்கப்பட்டன.
நூல்கள் வெளியீடு: இதைத் தொடர்ந்து எதிரொலி விசுவநாதன் எழுதிய "பாரதி 400', கவிஞர் நித்ராவின் "தலைப்பே தோணல', கவிஞர் கோதை எழுதிய "ஓங்கில் மீன்கள்' ஆகிய நூல்களையும் "தினமணி' ஆசிரியர் கி.வைத்தியநாதன் வெளியிட்டார்.
விழாவில், சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் ய.மணிகண்டன், புதுகை தென்றல் ஆசிரியர் தருமராசன், திருவள்ளுவர் இலக்கிய மன்றத் தலைவர் கோ.பார்த்தசாரதி, மனிதநேய மன்றத்தின் தலைவர் முத்துக்குமாரசாமி, அரிமா சங்க நிர்வாகி சுந்தரராஜன், எழுத்தாளர்கள் நெல்லை சு.முத்து, அமுதா பாலகிருஷ்ணன், பொதிகை தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் விஜய கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை பாரதி நெல்லையப்பர் மன்றத்தின் நிறுவனர் எதிரொலி விசுவநாதன், தலைவர் மதுரை சேகர், செயலாளர் இளசை கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தூய இருதய ஆண்டவர் பசிலிக்காவின் 119-ம் ஆண்டு பெருவிழா தொடக்கம்!

பென் ஸ்டோக்ஸ் முக மாற்றம்..! கவலையில் ரசிகர்கள்!

மதுரை வீரகாளியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா!

யோகி ஆதித்யநாத் பிறந்தநாள்: ராஜ்நாத் சிங், மாயாவதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
விடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | June 7 முதல் 13 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்


