திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

மக்களை வேட்டையாடிய வேட்டைக்காரன் யார்? அதிமுக கேள்வி!

கரூரில் 41 பேர் பலியான சம்பவம் குறித்து அதிமுக கேள்வி.

News image

அதிமுக அலுவலகம் - DPS

Updated On :21 ஜூலை 2026, 11:54 am IST

மக்களை வேட்டையாடிய வேட்டைக்காரன் யார்? என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள விடியோவில் தெரிவித்திருப்பதாவது:

கரூரில் 41 பேர் பலியான சம்பவம், ஜென் ஸி தலைமுறைகளுக்கு வேண்டுமானால், அது திரைப்படக் காட்சியாக இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிற அந்தக் காட்சி, இன்னும் நெஞ்சைவிட்டு அகலவில்லை.

ஆனால், அதே கரூருக்கு இப்போது விஜய் முதல்வராகச் சென்று, வீர வசனம் பேசுகிறார். ஓடு, ஓடு, வறான் பாரு, வேட்டைக்காரன்... அப்படின்னு சொல்கிறார். மக்களை வேட்டையாடிய வேட்டைக்காரன் யார்?

41 உயிரைப் பலி வாங்கிய அந்த வேட்டைக்காரன் யார்? அதற்கு தீர்ப்புதான், இன்றைக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், நீதி அரசர்கள் கமிஷன் அமைத்து, சிபிஐ வழக்கு தொடுத்து, அந்த சிபிஐ வழக்கு இன்றைக்கு தலைக்குமேல் கத்தியாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது.

எப்போது வேண்டுமானாலும் சிபிஐ வழக்கின் தீர்ப்பு வெளிவருகிறபோது, தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன அதிர்ச்சி காத்திருக்கிறது என்பது ஆண்டவனுக்கும், நீதி அரசர்களுக்கும்தான் வெளிச்சமாக இருக்கிறது.

முதல்வர் விஜய் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் நிர்வாகத்திற்கு புதியவர்களாக இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்

இதற்கு இடையில், இடைத்தேர்தல் வருமா, வராதா? என்று தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்த்திருக்கிறார்களோ இல்லையோ, ராஜிநாமா செய்துவிட்டுபோன அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் த.வெ.க. அமைச்சர்களை நச்சரித்து, அதிமுக அகதிகள் அணி, இலவுகாத்த கிளியாக இடைத்தேர்தல் அறிவிப்புக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆகவே, த.வெ.க. அரசின் இந்த நிலையற்ற தன்மையால், நிர்வாகம் இன்னும் எத்தனை நாளைக்கு நீடிக்கும்? இந்த நிலையற்ற நிர்வாகத்தின் மீது கேள்வி எழுகிறபோது, முதல்வர் விஜய்க்கே வெளிச்சம். பொறுத்திருந்து பார்ப்போம். நல்ல செய்தி வரும்” எனக் கூறினார்.

Summary

Former AIADMK Minister R.B. Udhayakumar has asked who the hunter was that preyed on the people.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.