காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, சென்னையில் திங்கள்கிழமை 12 இடங்களில் நடைபெற்ற மறியல், முற்றுகைப் போராட்டத்தில் 635 பேர் கைது செய்யப்பட்டனர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தேமுதிகவினர் வேளச்சேரி ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் வேளச்சேரியில் இருந்து சூலூர்பேட்டைக்கு செல்லும் ரயில் முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 23 பெண்கள் உள்பட 235 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சாஸ்திரி பவனை முற்றுகை:
நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) சார்பில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதற்காக வந்த விவசாயிகளை போலீஸார் தடுத்து நிறுத்தி 125 பேரை கைது செய்தனர்.
அகில சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் இரு இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் ஈடுபட்ட 60 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை முழுவதும் தடையை மீறி 6 இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் மொத்தம் 635 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
மேலும் 6 இடங்களில் இதே கோரிக்கையை முன்வைத்து பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 60 பெண்கள் உள்பட 380 பேர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்னல் தாக்கி மாணவா் உயிரிழப்பு

4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!

உயர்நீதிமன்றத்துக்கு நாளை முதல் விடுமுறை! அவசர வழக்கிற்கு என்ன செய்யலாம்?

கருத்துக் கணிப்புகள் பாஜகவால் நடத்தப்படுகிறது! திரிணமூல் 226 தொகுதிகளில் வெல்லும் - மமதா
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

