ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரதான மின் கம்பி எரிந்ததால் மருத்துவமனையில் மின்சாரம் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக ஏற்கெனவே திட்டமிடப்பட்ட அறுவைச் சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டன.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர். 500-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவசரகால சிகிச்சை, நரம்பியல், இரைப்பை-குடல் அறுவைச் சிகிச்சை, புற்றுநோய் உள்ளிட்ட துறைகள் இந்த மருத்துவமனையில் செயல்பட்டு வருகின்றன.
மருத்துவமனைக்குச் செல்லும் பிரதான மின் கம்பி புதன்கிழமை காலை திடீரென்று எரிந்தது. இதனால் மருத்துவமனையில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக மின்சார வாரியத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட முக்கிய பிரிவுகளுக்கு மின்சாரம் அளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
தற்காலிக மின்கம்பி மூலம் அந்தப் பிரிவுகளுக்கு மின்விநியோகம் வழங்கப்பட்டது. இருப்பினும் உள்நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள தொடர் ரத்தக்கசிவு சிகிச்சை மையம், நரம்பியல் துறை உள்ளிட்ட பிரிவுகள் உள்ள கட்டடங்களுக்கு வியாழக்கிழமை மாலை வரை மின்சாரம் வழங்கப்படவில்லை
ரத்தம் மாற்றம்: மருத்துமனையின் ரத்த வங்கியில் சேமிக்கப்பட்டுள்ள ரத்தம் அனைத்தும் கெட்டுப் போகாமல் இருக்கும் வகையில், அவை அனைத்தும் ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டன. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் பல்வேறு சிரமத்துக்கு ஆளாகினர். இது தொடர்பாக மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், மருத்துவமனைக்கு மின்சாரத்தை விநியோகிக்கும் பிரதான மின் கம்பி எரிந்ததால் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டது. அவசர கால மற்றும் உள்நோயாளிகள் தங்கியிருக்கும் கட்டடங்களுக்கு மின்சாரம் மாலைக்குள் வழங்கப்பட்டுவிட்டது. மின்தடையால் திட்டமிட்ட சில அறுவைச் சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டன. இருப்பினும் எட்டு அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
இன்று முழுமையாக சீராகும்: பழுதடைந்த மின் கம்பியை மாற்றும் பணி துரித கதியில் நடைபெற்று வருகிறது. மருத்துவமனையின் அனைத்துப் பிரிவுகளுக்கும் வியாழக்கிழமைக்குள் தடையில்லாத மின்சாரம் வழங்கப்படும் என்று மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

என் பெயர் எங்கப்பா? கார்த்தியைக் கிண்டலடித்த சூர்யா!

சொதப்பும் டெவால்டு பிரெவிஸ்..! கடந்த சீசனைவிட 50% குறைவான ரன்கள்!

குஜராத் டைட்டன்ஸின் தோல்விக்கு காரணம் இதுதான்; பயிற்சியாளர் கூறியதென்ன?

ஐக்கிய அரபு அமீரகத்தின் அணுமின் நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்! மீண்டும் போர்?
விடியோக்கள்

அதிமுகவை அழிக்க நினைக்கிறார் Vijay! டிடிவி தினகரன் | TVK | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

DMK - ADMK கூட்டணி பேச்சுவார்த்தைக்கு உதவினேனா? விமர்சனங்களுக்கு Rajinikanth பதில்!
இணையதளச் செய்திப் பிரிவு

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு
