சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து அண்மையில் கொண்டு வரப்பட்ட கோடிட்ட ஆண் கழுதைப் புலி திடீரென காணாமல் போய்விட்டது. பூங்கா வளாகத்திற்குள் மாயமான அந்தக் கழுதைப் புலியை தேடும் பணியில் வனத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு, கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள ஸ்ரீசாமராஜேந்திரா உயிரியல் பூங்காவில் இருந்து 2 ஜோடி கோடிட்ட கழுதைப் புலிகள், தலா ஒரு ஜோடி ஆண் இந்திய காட்டு மாடு, லேடி அம்ஹர்ஸ்ட் கோழி, குள்ளநரி, தங்க நிறக் கோழி, சாரஸ் கொக்கு, கருப்பு அன்னப்பறவை, ஈகிளக்டஸ் கிளி ஆகியவை கடந்த வாரம் கொண்டு வரப்பட்டன. இந்த வன விலங்குகள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்ட பின்னர் அவை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
கழுதைப் புலி மாயம்: இந்நிலையில், மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த 4 கழுதைப் புலிகளில் ஒரு ஆண் கழுதைப் புலி திங்கள்கிழமை மாலை மயமானது. இதுகுறித்து வனத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, இந்தப் பூங்காவில் ஏற்கெனவே 2 கழுதைப் புலிகள் உள்ளன. கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள ஸ்ரீசாமராஜேந்திரா உயிரியல் பூங்காவில் இருந்து அண்மையில் கொண்டு வரப்பட்ட 4 கோடிட்ட கழுதைப் புலிகளில் இரண்டு வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் கழுதைப் புலி கூண்டில் இருந்த சிறிய ஓட்டையைப் பயன்படுத்தி திங்கள்கிழமை மாலை தப்பியுள்ளது.
அந்தக் கழுதைப் புலி பூங்கா வளாகத்தை விட்டு வெளியேற வாய்ப்பில்லை. செவ்வாய்க்கிழமை காலைக்குள் கழுதைப் புலியைப் பிடித்து விடுவோம். இதனால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை' என்றார்.
பூங்காவுக்கு வழக்கமாக செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் செவ்வாய்க்கிழமை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அதற்குள் காணாமல் போன கழுதைப் புலியை கண்டுபிடிக்கும் தீவிரப் பணியை பூங்கா ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








