மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் முறைகேடு: மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் நடைபெற்றுள்ள ஊழல், முறைகேட்டில் ஈடுபட்ட நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள்

News image
சென்னை புரசைவாக்கத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோருக்கான கூட்டமைப்பினர்.
Updated On :9 ஜூலை 2018, 10:53 pm

DIN

மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் நடைபெற்றுள்ள ஊழல், முறைகேட்டில் ஈடுபட்ட நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோருக்கான கூட்டமைப்பினர் சென்னையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கம் மற்றும் மனவளர்ச்சி குன்றியோருக்கான அகில இந்திய கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில், சென்னை புரசைவாக்கத்தில் திங்கள்கிழமை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ஜான்ஸி ராணி, மனவளர்ச்சி குன்றியோருக்கான கூட்டமைப்புச் செயலர் எம். ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். பொதுச் செயலர் எஸ்.நம்பிராஜன் முன்னிலை வகித்தார். 150-க்கும் அதிகமான மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள், தங்களின் பெற்றோருடன் பங்கேற்றனர்.
மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் ஊழல் முறைகேடு செய்துள்ள தமிழ்நாடு ஏரியா இயக்குநர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணை முடியும் வரை தமிழகத்தில் போட்டிகள் நடத்த தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் கூறியது: 
மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் ஊழல் முறைகேடு செய்துள்ள தமிழ்நாடு ஏரியா இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,, அலுவலகத்தை முற்றுகையிட வந்தோம். ஆனால், அந்த முகவரியில் சிறப்பு ஒலிம்பிக் அலுவலகம் செயல்படுவதற்கான பெயர் பலகைக் கூட இல்லை. கோடிக்கணக்கில் அரசு நிதியைப் பெறும் ஒரு விளையாட்டு கமிட்டிக்கு பெயர் பலகைக் கூட இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.